நீலகிரியில் 283 அபாயகரமான நிலச்சரிவு பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது… மாவட்ட ஆட்சியர் தகவல்!!

நீலகிரி மாவட்டத்தில் 283 பகுதிகள் நிலச்சரிவு ஏற்படும் அபாயகரமான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து, 40 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழு சென்னையில் இருந்து நீலகிரிக்கு வருகை தர உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்க 500 முகாம்கள் தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

அதேபோல, கோவை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கன மழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் அளித்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு காற்றின் மலைச்சரிவு மற்றும் மழைப்பொழிவு காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நீலகிரில் நிலச்சரிவு ஏற்படும் இடங்கள் குறித்தும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே