குடிநீர் விவகாரம் : தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு

சீல் வைக்கப்பட்ட குடிநீர் ஆலைகள் உரிமம் கோரி புதியதாக விண்ணப்பங்களை விண்ணப்பிக்கவும் அதனை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும் புதியதாக உரிமம் கோரும் விண்ணப்பங்கள் மீது 15 நாட்களில் தமிழக அரசு முடிவெடுக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் புதிதாக உரிமம் கோரி 1054 விண்ணப்பங்கள் வந்துள்ளது.

அதில் 690 விண்ணப்பங்கள் தகுதி உடையதாக உள்ளது.

இதனை பரிசீலனை செய்த 90 நாள் அவகாசம் கேட்டது.

இதையெடுத்து அரசு சார்பில் பரிசீலிக்க கேட்ட 90 நாட்கள் அவகாச கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. 

மேலும் 2 வாரத்தில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்காத அதிகாரிகள் ரூபாய் 50 ஆயிரம் வரை அபராதம் செலுத்த நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரித்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே