ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சுமார் 20 வருடமாக சிறைவாசம் அனுபவித்துவருபவர்கள் எழுவரில் ஒருவர் பேரறிவாளன்.
இவரை விடுதலை செய்ய தாய் அற்புதம் அம்மாள் பல ஆண்டுகளாக நடத்தும் சட்டப்போராட்டத்தையும் கண்ணீர் போராட்டத்தையும் சொல்லில் அடக்கிவிட முடியாது.
எழுவரை விடுதலை செய்ய தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது.
இதற்கான ஆவணங்கள் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், பல மாதங்களாக கிடப்பில் கிடந்தன.
இதனிடையே தன்னை விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் சார்பில் வழக்கு தொடர்ப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது ஆளுநர் ஜனவரி 21ஆம் தேதிக்குள் தீர்மானம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்று காத்திருந்த அற்புதம் அம்மாளுக்கு ஏமாற்றமே கிடைத்தது.
விடுதலை விவகாரத்தில் குடியரசு தலைவர் தான் முடிவெடுப்பார் என்று கூறி ஆளுநர் அரசின் தீர்மானத்தை நிராகரித்தார். இதையடுத்து குடியரசுத் தலைவர் முடிவை அறிவிப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சகமும் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
அறிவின் விடுதலை வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
மாநில அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க முடியாது என ஆளுநர் அறிவித்து விட்டார்.
சட்ட ரீதியாக அதுகுறித்து சொல்ல எதுவும் இல்லை என கடந்த முறை போலவே மாநில அரசு ஒதுங்கி நிற்க போகிறதா?
அல்லது மூத்த வழக்கறிஞரை அமர்த்தி வாதிட போகிறதா?— Arputham Ammal (@ArputhamAmmal) March 15, 2021
இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அற்புதம் அம்மாள், “அறிவின் விடுதலை வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. மாநில அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க முடியாது என ஆளுநர் அறிவித்து விட்டார். சட்ட ரீதியாக அதுகுறித்து சொல்ல எதுவும் இல்லை என கடந்த முறை போலவே மாநில அரசு ஒதுங்கி நிற்க போகிறதா? அல்லது மூத்த வழக்கறிஞரை அமர்த்தி வாதிட போகிறதா?” என்று கேள்வி கேட்டுள்ளார்.