BREAKING NEWS : நிர்பயா வழக்கு விசாரணையில் இருந்து விலகினார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே!

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற குற்றவாளி அக்சய் குமார் சிங் தாக்கல் செய்த சீராய்வு மனு விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி பாப்டே விலகினார்.

கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி நிர்பயா என்ற மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் 6 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் 6 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது.

6 பேரில் ஒருவர் சிறார் என்பதால், அவர் சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.

மீதமுள்ள 5 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

முக்கிய குற்றவாளி ராம் சிங் திஹார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

மற்ற 4 பேரும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 4 பேருக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. அவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் துவங்கின.

இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான அக்சய் குமார் சிங், உச்சநீதிமன்றத்தில் தூக்கு தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி பாப்டே கூறுகையில், நிர்பயா வழக்கு விசாரணையில், ஏற்கனவே தனது குடும்பத்தினர் ஒருவர் ஆஜராகியுள்ளார்.

இதனால் வழக்கு விசாரணையில் இருந்து விலகி கொள்கிறேன். புதிய நீதிபதி அமர்வில், நாளை காலை 10.30 மணிக்கு விசாரணை நடக்கும் என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே