திராவிட அரசியல் கெட்டுப் போய் விட்டது : கமல்ஹாசன்

திராவிட அரசியல் கெட்டுப் போய் விட்டதால் அதனை சரி செய்ய முயற்சிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார். 

திருச்சியில் மக்கள் நீதி மய்ய அலுவலகத்தை நடிகர் கமலஹாசன் நேற்று திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியலுக்கு நேர்மையாளர்கள் வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

திராவிட அரசியல் கெட்டுப் போய் விட்டதாக குற்றம்சாட்டிய கமல்ஹாசன், அதனை சரி செய்யும் பணியில் மக்கள் நீதி மய்யம் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டார்.

ரஜினியின் தர்பார் படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் தொடர்பாக சலசலப்பு எழுந்துள்ளது பற்றிய கேள்விக்கு பதிலளித்த கமலஹாசன், பராசக்தி படம் முதலே இதுபோன்ற சர்ச்சைகள் எழுந்து வருவதாக குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே