இன்று ராகுல் டிராவிட் பிறந்தநாள்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் இன்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் உலக அளவில் கிரிக்கெட் வீரர்களே கொண்டாடும் ஜாம்பவான், பத்மபூஷண் விருது பெற்றவர், இதையெல்லாம் விட அவருடைய சிறப்பு என்னவெனில் கிரிக்கெட்டை நேசிக்கும் பலருக்கு அவர் ரோல் மாடலாகத் திகழ்பவர்.

இந்திய அணியின் சுவர் என்று போற்றப்பட்டவர்.

விளையாட்டில் மட்டுமல்லாமல் தன்னுடைய நடத்தையிலும் பலரின் மனங்களை வென்றவர் ராகுல் டிராவிட்.

கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாது ரசிகர்களும் வியந்து பார்க்கும் விஷயம் அவரது நிதானம்.

எப்படி உங்களால் எப்போதும் பொறுமையுடன் இருக்க முடிகிறது என்று கேட்டால், அதற்குப் பதில் புன்னகையைத் மட்டுமே தரக்கூடியவர்.

கபில் தேவ், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி எம்.எஸ். தோனி உள்ளிட்ட பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் பலத்த விமரிசனங்களுக்கும் உள்ளானவர்கள், ராகுல் டிராவிடைப் பொருத்தவரையில் அவர் அனைவரும் விரும்பும் ஒரு மனிதராக இருந்தார்.  

அவரிடம் இருக்கும் பண்புகளுக்காக பெரிதும் போற்றப்பட்டு வருகிறார்.

கிரிக்கெட்டில் வெற்றி தோல்விகள் சகஜம். தனது வெற்றிகளைக் கூடச் சாதாரணமாகப் பார்க்கும் இயல்புடையவர் டிராவிட்.

திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன் வரும் புகைப்பழக்கம் புற்றுநோயைத் தரும் என்று எல்லா மொழிகளிலும் பேசித் தோன்றும் ராகுல் டிராவிடைக் கிரிக்கெட் பற்றி எதுவும் தெரியாதவர்கள் கூட ரசிப்பார்கள். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே