#திரெளபதி : இன்று முதல் மிரட்ட வருகிறாள் திரெளபதி..!!

திரௌபதி படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் படத்தை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

வண்ணாரப் பேட்டை படத்தை தொடர்ந்து இயக்குநர் மோகன் இயக்கியிருக்கும் படம் திரௌபதி.

இதில் இரண்டு சமூகம், நாடகக்காதல், ஆணவக் கொலை ஆகியவற்றை மையப்படுத்தியுள்ளனர்.

இதன் ட்ரெயிலர் ரிலீஸ் ஆன போதே எதிர்ப்பும் ஆதரவும் ஒன்றாக எழுந்தது. படத்தை ரிலீஸ் செய்ய சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் பல எதிர்ப்புகளை மீறி திரௌபதி படம் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது.

பல இடங்களில் சிறப்பு காட்சியாக நேற்று இரவே படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக எச் ராஜா உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் படத்தை பார்த்தனர்.

இந்நிலையில் திரௌபதி படம் எப்படி உள்ளது என்பது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

நெட்டிசன்கள் கருத்துக்கள் :

திரௌபதி படம் குறித்து இந்த நெட்டிசன் வெளியிட்டுள்ள பதிவில் பிரபல நடிகர்கள் இல்லாமல் எடுக்கப்பட்ட திரைப்படம்.. ஆடியோ வெளியிட பெரிய மேடை கிடையாது.. தயாரிப்பாளர்கள் இல்லாமல் கூட்டு முயற்சியில் உருவான திரைப்படம்.. இன்று தமிழகம் முழுவதும் பேச்சு பொருளாக மாறியுள்ளது.. என தெரிவித்திருக்கிறார்

திரௌபதி படத்தை பார்த்த பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, படத்தை பார்த்து கூறிய கருத்தை #திரெளபதி.. பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல என தெரிவித்திருக்கிறார் இந்த ரசிகர்.

மேலும் திரௌபதி படம் மாஸ், பியூட்டிஃபுல், செம்ம என புகழ்ந்து வருகின்றனர் படத்தை பார்த்த ரசிகர்கள்.

உண்மைக் கதைகள்.. சவாலான காட்சிகள் படங்களில் இடம் பெற்றுள்ளது. இயக்குநர் மற்றும் படக்குழு நன்றாக வேலை செய்திருக்கிறார்.

சில லோக்கல் டயலாக்குகள் சுவாரஸ்யமாக உள்ளது. இறுதியில் நல்ல மெஸேஜ். குடும்ப படம்.. என்னுடைய ரேட்டிங் 5க்கு 4.3 என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

இந்த வீக் எண்டில் நான்(ம்) அவசியம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம் என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

கிட்ட தட்ட இருபது ஆண்டுகளுக்கு பிறகு நான் ஒரு திரைப்படம் காண போகிறேன் என்றால் அது என் குல தெய்வ டைட்டில் #திரெளபதி தான் மகிழ்ச்சி என்று பதிவிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

மிரட்டல் ஆரம்பம் என என திரௌபதி படத்தை குறிப்பிட்டிருக்கிறார் இவர்.

படத்திற்கு பாஸிட்டிவான விமர்சனங்கள் எழுந்துள்ள போதும் சாதிய ரீதியான கமென்ட்ஸ்களும் டிவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டு வருகிறது.

குறிப்பாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் படங்களுக்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றனர்.

அற்புதமான படைப்பு இயக்குநர் மோகன் அவர்களே.. #திரெளபதி (பெண்கள் ) அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என பதிவிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

முதல் இடத்தை பிடித்தாள் திரௌபதி என குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

திரௌபதி ஆட்டம் ஆரம்பம் என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே