திருமணத்தில் அதிகபட்சமாக 50 பேருக்கும், இறுதிச்சடங்குகளில் 20 பேருக்கு அனுமதி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்ட பிறகு, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை, செப். 30- ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக நேற்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த 4 ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், திருமணம் மற்றும் இறுதி சடங்கிற்கு ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் திருமணம் நிகழ்ச்சியில் அதிகபட்சமாக 50 பேருக்கும் அனுமதி வழங்கப்படும் என்றும்; இறுதிச்சடங்குகளில் 20 பேருக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே