சேலத்தில் 6 அடி உயரத்தில் தோனி கேக்!

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் உருவத்தில் 6 அடி உயர கேக் செய்து வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைத்துள்ளது காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டும், தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் காலடி எடுத்து வைத்து 15 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதமாகவும் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் 6 அடி உயர கேக் செய்து அசத்தியுள்ளார்.

தமிழகம் சேலத்தில் உள்ள ஒரு பேக்கரியில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் உருவத்திலான 6 அடி உயர கேக் செய்து வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைத்துள்ளனர்.

இது காண்போரை வெகுவாக கவர்ந்தது மட்டுமில்லாமல் பலரும் இந்த கேக் உடன் நின்று செல்ஃபிகளை எடுத்துக்கொண்டனர்.

2004, டிசம்பர் 23-ல் சிட்டகாங்கில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

அப்போது இந்திய அணிக்கு செளரவ் கங்குலி தலைமை தாங்கினார்.

அன்றைய நாளில் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக களமிறங்கினார்.

இது நடந்து இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர். தங்களின் வாழ்த்துகளையும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே