குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான திமுக போராட்டத்தில் வன்முறைக்கு அஞ்சும் பெரியவர்களை வீட்டிலேயே விட்டு வருமாறு உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் வரும் 23ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
உரிமைக்கான போராட்டத்தை கண்டு வன்முறை என்று அஞ்சும் வசதியான வயதான பெரியவர்களை சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டு வரவும் எனவும் ட்விட்டர் பதிவில் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.