IND vs ENG | டி20 தொடரை வெல்ல வேண்டுமெனில் இதைச் செய்யுங்கள்: இங்கிலாந்துக்கு தினேஷ் கார்த்திக் டிப்ஸ்

நடப்பு டி20 தொடரில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து பிரமாதமாக ஆடி வந்தாலும் தொடரை வெல்ல வேண்டுமெனில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று இங்கிலாந்து அணிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

நடப்பு டி20 தொடரில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து பிரமாதமாக ஆடி வந்தாலும் தொடரை வெல்ல வேண்டுமெனில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று இங்கிலாந்து அணிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

உலகின் நம்பர் 1 டி20 வீரர் டேவிட் மலான் இந்தத் தொடரில் 24 நாட் அவுட், 24, 18, 14 என்று சொதப்பி வருகிறார். அவருக்குப் பதிலாக பென் ஸ்டோக்ஸை 3ம் நிலையில் இறக்குங்கள் என்கிறார் தினேஷ் கார்த்திக்.

இது தொடர்பாக தினேஷ் கார்த்திக் கூறியதாவது:

மலானுக்கு எதிராக எனக்கு ஒன்றுமில்லை. அவர் சிறந்த வீரர்தான். ஆனால் ஸ்டோக்சை 3ம் நிலையில் இறக்கினீர்கள் என்றால் நிச்சயம் பலனளிக்கும், அவர் பவுலர்களை எப்படி கையாள்கிறார், என்ன மாதிரியான தீவிரத்தைக் காட்டுகிறார் என்பதை வைத்து ஸ்டோக்ஸ் 3ம் நிலையில் இறங்க வேண்டும் என்கிறேன்.

அதாவது ஜேசன் ராய், பட்லர், ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ, இயான் மோர்கன் என்ற வரிசையில் இறக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது திடமான வரிசை முறையாக இருக்கிறது என்று நினைக்கிறேன், என்றார் தினேஷ் கார்த்திக்.

“பென் ஸ்டோக்ஸை இங்கிலாந்து இன்னும் எவ்வளவு சிறப்பாகப் பயன்படுத்த வேண்டு என்பது பற்றி எனக்கு தெரியாது, ஆனால் அவரைப்போன்ற சிறந்த கிரிக்கெட் வீரரிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வரவழைக்கவில்லை என்று எனக்குத் தெரிகிறது. ” என்று விவாதத்தில் பங்கேற்ற ராபர்ட் கீ தெரிவித்தார்.

மேலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸ் தொடக்கத்தில் இறங்கி 200 ரன்களை எடுத்ததை இருவரும் முன்னெடுத்து வைத்தனர். நம்பர் 6-ல் ஸ்டோக்ஸின் ஸ்ட்ரைக் ரேட் 134 இது குறைவில்லை என்றாலும் அதே டவுனில் சிறந்த அதிரடி வீரர்கள் 180 என்ற ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளனர். எனவே பென் ஸ்டோக்சை அந்த மட்டத்துக்குக் கொண்டு வரும் டவுன் ஆர்டரில் அவரை முன்னால் இறக்க வேண்டும் என்று தினேஷ் கார்த்திக், ராபர்ட் கீ இருவரும் தெரிவித்தனர்.

இந்தியா, இங்கிலாந்து டி20 தொடர் 2-2 என்று சமநிலையில் உள்ளது. தொடரில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 5வது போட்டி நாளை (மார்ச் 20) நடைபெறுகிறது.

இதற்காகவாவது ராகுலை உட்கார வைத்து இஷான் கிஷனை தேர்ந்தெடுப்பாரா கோலி அல்லது, வெற்றி கூட்டணியை மாற்றக்கூடாது என்று நண்பன் ராகுலுக்கு குடைப்பிடிப்பாரா என்று தெரியவில்லை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே