தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறும்

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் சட்டமன்ற கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

அதில் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு சட்டமன்ற திமுக கொறடா சக்கரபாணி கேட்டுக் கொண்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே