புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, நிகழ்ந்த வாகன விபத்துகளில் 7 பேர் பலி

சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நேரிட்ட வாகன விபத்துகளில் 7 பேர் உயிரிழந்தனர். 

இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தாம்பரத்தில் நின்று இருந்த பேருந்து மீது பைக் மோதியதில் தங்கவேலு என்ற கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

இதேபோல் புழல் சிறைச்சாலை அருகே வழக்கறிஞர் ராமலிங்கம் என்பவர் லாரி மோதி உயிரிழந்தார்.

எண்ணூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற மீன் வியாபாரி சுந்தர் என்பவர் சென்ற பைக் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார். 

இதேபோல் சென்னை போரூரை சேர்ந்த முகமது என்பவர் ஆட்டோ மோதி பலியானார்.

புழல் கதிர்வேடு அருகே லாரி மோதியதில் சங்கர் என்பவர் உயிரிழந்தார்.

இதேபோன்று சென்னையில் பல இடங்களில் ஏற்பட்ட சிறுசிறு விபத்துகளில் 30-க்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை எழும்பூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயசித்ரா மீது ஆட்டோ மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

மேலும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தரமணி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் புஷ்பராஜ் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதேபோல் காஞ்சிபுரத்தில் மதுபோதையில் கார் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

சென்னையை சேர்ந்த 6 பேர் காஞ்சிபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு காரில் சென்னை திரும்பிக்கொண்டிருந்தனர்.

கார் இருங்காட்டுக்கோட்டை அருகே வந்தபோது முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் விக்னேஷ் மற்றும் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே