நடிகர் எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் கோரி மனு!

“காவியை களங்கம் என்று முதல்வர் சொல்கிறாரே, அந்த களங்கமான தேசிய கொடியை தான் ஆகஸ்டு 15 ம் தேதி ஏற்ற போகிறாரா? தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்கிறாரா?” என்று எஸ்வி சேகர் சர்ச்சையான ஒரு கேள்வியை கேட்கவும், மத்திய குற்ற பிரிவு போலீஸார் காமெடியன் எஸ்வி சேகர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், தான் எந்நேரமும் கைதாகலாம் என்று கருதி, எஸ்வி சேகர் சென்னை ஹைகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு, எம்ஜிஆர். சிலைக்கு காவி போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்தபோது, “தலைவர்களின் சிலைகளை இப்படி களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்திருந்தார்.

உடனே எஸ்வி சேகர் ஒரு வீடியோ போட்டு, தேசிய கொடியை அவமதித்து பேசியிருந்தார்..

அதாவது, “தேசிய கொடியில் உள்ள 3 நிறங்களும் 3 மதத்தினரை குறிக்கும்.. காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழக முதல்வர், அந்த களங்கமான தேசிய கொடியைத் தான் ஆகஸ்டு 15 ம் தேதி ஏற்றப்போகிறாரா?

தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்கிறாரா?” என்று கேட்டிருந்தார்.

சில நாட்களாகவே எஸ்வி சேகர் பழைய மாதிரி சர்ச்சைகளில் சிக்கி வரும்நிலையில், அவரது இந்த பேச்சு அனைத்து தரப்புக்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது..

நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் எஸ்வி சேகர் மீது சென்னை கமிஷனர் ஆபீசில் ஒரு புகார் தந்திருந்தார்..

அது மட்டுமல்ல, “எஸ்வி சேகர் தேசிய கொடியை அவமதித்ததும், முதல்வர் குறித்து அவதூறாக பேசியதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் நீண்ட காலமாக ஜெயிலுக்கு போக ஆசைப்படுகிறார்…

அவரது ஆசையை அதிமுக நிறைவேற்றும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்திருந்தார்.

ஜெயக்குமார் இப்படி சொன்ன மறுநாளே, தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எஸ்விசேகர் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்..

ராஜரத்தினம் ஏற்கனவே அளித்திருந்த புகாரின் அடிப்படையில்தான் இந்த நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர். தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் பிரிவு 2 ன் கீழ் எஸ்வி சேகர் மீது மத்திய குற்ற பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், தற்போது முன்ஜாமீன் கோரி சென்னை ஹைகோர்ட்டை அணுகியுள்ளார் எஸ்வி சேகர்..

இந்த வழக்கில் எப்படியும் போலீசார் தன்னை கைது செய்யக் கூடும் என கருதி, முன் ஜாமீன் சென்னை ஹைகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் திங்கள் கிழமை விசாரணைக்கு வருகிறது.

அன்று, பெண் பத்திரிகையாளரை இழிவுபடுத்திய பேசியது தொடர்பாக சர்ச்சையில் எஸ்வி சேகர் சிக்கினார்..

அப்போதும் இப்படியேதான் முன்ஜாமீன் கோரி சென்னை ஹைகோர்ட்டுக்கு ஓடினார்..

அங்கு ஜாமீன் மறுக்கப்படவும், சுப்ரீம் கோர்ட் ஓடினார்.. அங்கும் ஜாமீன் வழங்க மறுத்ததுடன், கைது செய்யலாம் என்றும் கோர்ட் தெரிவித்தது.

ஆனால், எஸ்வி சேகர் கல்யாணத்துக்கு போனார்.. போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.. வீடியோ வெளியிட்டார்.. போலீஸ் பாதுகாப்புடனேயே சென்னையில் ரவுண்டு அடித்தார்..

இதெல்லாம் வெட்டவெளிச்சமாக தெரிந்தும்கூட, கடைசிவரை அவரை போலீசார் கைது செய்யவே இல்லை. ,; என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே