திமுக எம்.பி. கனிமொழியின் மனு தள்ளுபடி!

தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்க கோரி திமுக எம்பி கனிமொழி தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழி வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால், அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்ககோரி, சந்தான குமார் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சந்தான குமார் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் கனிமொழி மனு தாக்கல் செய்தார். இதன்மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அப்போது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி சந்தான குமாரின் வழக்கு விசாரணைக்கு உகந்தது என்று தெரிவித்து, கனிமொழியின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 401 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே