தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வாக்குச்சாவடிக்கு வெளியே திமுக உறுப்பினர் ஒருவரின் மண்டையை உடைத்த அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டத்திலுள்ள கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கோம்பை தோடு கிராமத்தில் வாக்கு சாவடிக்கு வெளியே திமுக மற்றும் அதிமுக பிரமுகர் களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் அதிமுகவை சேர்ந்த செல்லத்துரை என்பவர் தாக்கியதில் திமுகவை சேர்ந்த பெருமாள் என்பவரின் மண்டை உடைந்தது.
இதனையடுத்து, அவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள மயிலாடும்பாறை காவல்துறையினர் செல்லத்துரையை கைது செய்தனர்.
தான் தாக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெருமாள், 18 வயதுக்கு குறைவான வயது உள்ளவர்களும் வாக்களிக்க வந்ததாகவும்; அதை தான் தட்டி கேட்டதாகவும்; அதனால் அதிமுகவினர் தன்னை தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.