கிழக்கு டெல்லி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்

குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிரான போராட்டத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதால் டெல்லி கிழக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஜும்மா மசூதியில் தொழுகை முடித்த பின்னர் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள உத்தர பிரதேச இல்லத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்டிருப்பதாக டெல்லி காவல்துறையிக்கு கிடைத்த தகவலை அடுத்து, சீலம்பூர், ஜாப்ராஃபாத் உள்ளிட்ட காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீசார் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர்.

அத்துடன் 15 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே ஜாமியா மிலியா பல்லைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து செல்போன் மூலம் தகவல் பரிமாறியுள்ளனர்.

இதனால் தெற்கு மற்றும் தென்கிழக்கு மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே