ஊடகங்கள் வாயிலாகவும் நேரிலும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள கடற்கரைக்கு சென்ற அவர், அங்குள்ள அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அவருக்குபல்வேறு கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், “எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவர்க்கும் நன்றி. வரும் 7ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் திமுக கூட்டத்தில் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்க உள்ளேன்.10 ஆண்டுக்குள் ஒவ்வொரு துறையும் அடைய வேண்டிய இலக்கை நான் வரையறுத்து இருக்கிறேன். 

மூத்த நிர்வாகிகள், நடுநிலையாளர்கள், பல்துறை அறிஞர்கள் பல கட்டங்களாக நடத்தியிருக்கும் கலந்துரையாடலில் இது முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு பணியாற்றுவதில் இருந்து திமுக என்றும் பின்வாங்காது.தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது .

2 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக குறித்து மோடி பேசினார்; நேற்று அமித் ஷா பேசினார். இனிமே பாஜகவில் இருந்து வரக்கூடிய அனைவரும் அது தான் பேசுவார்கள்.

ஊழலில் திளைத்து கொண்டிருக்கிற அதிமுக அரசு ஊழல் செய்ய யார் துணை நிற்கிறார்கள் என்பது நாட்டுக்கு தெரியும் ” என்றார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே