நகம் கடிக்கும் பழக்கத்தால் உயிருக்கே ஆபத்தா? இந்தப் பழக்கத்தை தவிர்ப்பதற்கான வழிகள் என்ன?

நகம் கடிப்பது என்பது ஒரு கெட்டப் பழக்கம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும், நாம் அதை காதில் வாங்குவதே இல்லை

நம்மில் சிலருக்கு கோபம் வந்தாலும் சரி, பயம் வந்தாலும் சரி நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். நகம் கடிப்பது என்பது ஒரு கெட்டப் பழக்கம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும்,  அதை காதில் வாங்குவதே இல்லை. நகம் கடிப்பதால் உயிருக்கு ஆபத்து என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம்! நாம் நகம் கடிப்பதால், உடலில் பாக்டீரியா தொற்று கட்டுப்படுத்த இயலாமல் அதிகரிக்கும். இதனால் உறுப்பு செயலிழப்பு ஏற்படுகிறது. திசுக்கள் சேதமடைகிறது. முறையான சிகிச்சை அளிக்காமல் இருந்தால் உங்களுக்கு செப்சிஸ் தொற்று, செப்டிக் ஷாக் என்னும் உயிருக்கு ஆபத்தான நிலை உருவாகும். சிறுவயதில் தொடங்கும் இந்த சிக்கல் பெரியவர்களானாலும் அவர்களை விட்டு போவதில்லை. இவ்வாறு நாம் நகத்தை கடிப்பதால் இது நம் நகத்தை மட்டுமல்ல நம் பற்களையும் சேதப்படுத்துகிறது. இதை தடுக்க ஒரு சில வழிகள் உள்ளது அதை பற்றி தற்போது பார்க்கலாம்.

நகத்தை வெட்டவும் : நகத்தை அவ்வப்போது சுத்தமாக வெட்டி விட வேண்டும். நகம் கடிக்க முடியாத அளவிற்கு வாரம் ஒருமுறையோ குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை நகத்தை நன்றாக வெட்டிவிட வேண்டும். முடிந்த அளவு நகம் பெரிதாக இருக்கும் பொழுது நம்மால் அதை கடிக்க முடியாது. இது ஒரு முக்கியமான விஷயமாக செய்து கொண்டு வர வேண்டும். நகத்தை வெட்டுவது நல்ல ஒழுக்கமான காரியமும் கூட.

நகத்தில் பல்வேறு விதமான அழுக்குகள் இருக்கும். அதில் கிருமிகள் ஒளிந்திருக்கும். நகத்தைக் கடிக்கும் பொழுது அந்த கிருமிகள் நம் உடலுக்குள் சென்றுவிட வாய்ப்புகள் மிகவும் அதிகமாகவே இருக்கிறது. எனவே நகத்தை அடிக்கடி வெட்டிவிட வேண்டும். நகத்தை அடிக்கடி வெட்டினால் தேவையற்ற கிருமிகள் நம் வயிற்றில் தங்குவது குறைந்துவிடும். ஞாபகம் இல்லாதவர்கள் நம் மொபைல் போனில் கூட ரிமைண்டர் வைத்துக்கொள்ளலாம். இது ஒரு முக்கியமான வேலையாக செய்துவிட வேண்டும்.

வேப்பிலை: எதுவும் வேலை செய்யவில்லை என்றால் உங்கள் நகங்களில் தினமும் வேப்பிலை பேஸ்ட்டை லேசாக தடவிக் கொள்ள வேண்டும். இது கிருமி நாசினியும் கூட. ஆனால் நகங்களில் வாய் வைக்கும் பொழுது நமக்கு கசந்து விடும். எனவே நகங்களை கடிக்கும் பழக்கத்தை நாம் குறைத்து விடுவோம். குறிப்பாக இதை குழந்தைகளுக்கு செய்யலாம். இப்படி செய்தால் குழந்தைகள் மறந்தும் வாயில் காய் வைக்கமாட்டார்கள்.

மெனிக்யூர் செய்யலாமே: பெண்கள் அடிக்கடி மெனிக்யூர் செய்து பழகிக் கொள்ளலாம். உங்களுக்கு அதிகமான நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது என்றால் நிச்சயமாக நீங்கள் மெனிக்யூர் செய்து பழகிக் கொள்ளலாம். இது உங்கள் நகங்களையும் விரல்களையும் அழகாக அது மட்டுமில்லாமல் உங்கள் நகங்களில் உள்ள கிருமிகளையும் எடுத்து விடுகிறது. மேலும் நகங்களை வெட்டி விட்டு மெனிக்யூர் பண்ணும்பொழுது நகங்களும் விரல்களும் அழகாகவும் தெரியும். பலரும் உங்கள் நகங்களை பார்த்து வாவ்… என்று கூறுவார்கள்.

மற்ற வழிகள்.

* பதற்றமான சூழல்களில் சிலரால் நகத்தை கடிக்காமல் இருக்கவே முடியாது. அதுபோன்ற நேரத்தில் வேறொரு நல்ல பழக்கத்தை பழக்கப்படுத்திக்கொள்ளலாம். உதாரணமாக, ஸ்ட்ரெஸ் பால் உபயோகிப்பது, கை கழுவுவது, வாய் கொப்பளிப்பது, சாப்பிடுவது போன்றவை.

* கை மற்றும் வாய் தொடர்பான பயிற்சிகளாக இவை இருக்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே