சேலம் மாவட்டம் ஆத்தூர் (தனி) தொகுதி திமுக வேட்பாளர் ஜீவா ஸ்டாலின் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஜீவா ஸ்டாலின்.,க்கு பதிலாக, ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளராக சின்னதுரை அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் தனித்தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக போட்டியிட ஏற்கனவே திருமதி ஜீவா ஸ்டாலின் அவர்களின் பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது.

அவருக்கு மாற்றாக தற்போது சின்னத்துரை அவர்கள் ஆத்தூர் தனித் தொகுதியில் திமுக திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறது” என்று திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே