தமிழகத்தில் தொடங்கிய ரூ.1000 விநியோகம்: கடைபிடிக்கப்படுகிறதா சமூக விலகல்?

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அரிசி அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் இலவச பொருட்கள் வழங்கும் பணி தொடங்கியது. பல இடங்களில் மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்கவில்லை என புகார்கள் எழுந்துள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், ஏழைத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் மற்றும் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றை இலவசமாக வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது.

ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் நிவாரணத் தொகையை வழங்கி முடிக்க முடிவு செய்துள்ள தமிழக அரசு, வீடு வீடாக டோக்கன்களை விநியோகிப்பதை தீவிரப்படுத்தியுள்ளது.

இதனிடையே, டோக்கன் பெற்றவர்கள், இன்று ரேஷன் கடைகளுக்கு வந்து, பொருட்களையும் நிவாரணத் தொகையையும் வாங்கிச் சென்றனர்.

பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

சென்னை சைதாப்பேட்டையில் ரேஷன் கடையில் அரசின் அறிவுறுத்தலின்படி, சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை.

பொதுமக்கள் முண்டியடிக்க வேண்டாம் எனக் கூறும் நியாய விலைக்கடை ஊழியர்கள், போலீசாருக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

நீண்ட வரிசையில் நெருக்கமாக மக்கள் காணப்பட்ட நிலையில் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

அவர்களை சமூக விலகலை கடைபிடிக்க போலீசார் அறிவுறுத்தயும் அதை கேட்கவில்லை. இதனால் போலீசார் சிறிது நேரம் திணறினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே