மத்திய ,மாநில அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களில் தினமும் 2 முறை கிருமி நாசினி தெளிக்க சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த மே 03-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், நேற்று 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,058 உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1128 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில், நேற்றுவரை 673 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய ,மாநில அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களில் தினமும் 2 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏடிஎம் மையங்களில் ஒரு நபர் பயன்படுத்திய பின்னர் உடனடியாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.