தோனி தலைமையில் நிலையாக விளையாட முடியவில்லை : இஷாந்த் சர்மா

தோனி கேப்டனாக இருந்தபோது வேகப்பந்து வீச்சாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தியதால் தங்களால் அதிகளவு திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனதாக இஷாந்த் ஷர்மா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இசாந்த் சர்மா தோனி கேப்டனாக இருந்த காலத்தில் தங்களுக்குப் போதுமான விளையாட்டு அனுபவம் கிடைக்கவில்லை என்று கூறினார்.

மேலும் அப்போது பல வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்ததால் அவர்களை சுழற்சி முறையில் தோனி பயன்படுத்துவார் என்றும்; அதனால் பந்துவீச்சாளர்கள் இடையே ஒருங்கிணைப்பு மிகவும் குறைவாகவே இருந்ததாகவும் இஷாந்த் சர்மா கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் தற்போது கோலியின் தலைமையில் பந்துவீச்சாளர்கள் இடையே நல்ல ஒருங்கிணைப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே