அடித்துப் பட்டையைக் கிளப்பும் ஆட்டம்தான், இனி தூள்பறக்கும்: விராட் கோலி திட்டவட்டம்

இந்தியா உத்தேச அணி: ரோகித் சர்மா, ராகுல், விராட் கோலி, அய்யர், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல்/சுந்தர், ஷர்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார், சாஹல், நவ்தீப் சைனி

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்கும் முதல் டி20 போட்டியில் ரோகித் சர்மாவுடன் கே.எல்.ராகுல் தான் தொடக்க வீரராக இறங்குவார் என்று விராட் கோலி உறுதிப்படுத்தியுள்ளார்.

எனவே ஷிகர் தவண் குளிர்பானங்களை சுமக்க வேண்டியதுதான். 3-வது தொடக்க வீரர் ஒருவேளை முதல் 3 போட்டிகளில் வென்றால் கடைசி 2 போட்டிகளுக்கு வேண்டுமானால் தவானை இறக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில் விராட் கோலி கூறியதாவது:

ரோகித் ஆடுகிறார் என்றால் பிரச்னை இல்லை, ராகுல்தான் அவருடன் இறங்குவார். இருவரும் கடந்த காலத்தில் நன்றாக ஆடியுள்ளனர். இருவரில் யாருக்காவது ஓய்வு அளித்தால் ஷிகர் தவான் 3வது தொடக்க வீரராக இருப்பார். ரோகித்தும் ராகுலும் இங்கிலாந்துக்கு எதிராக தொடங்குகிறார்கள்.

நாங்கள் சுதந்திரமான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம், அணியில் அதிரடி வீரர்கள் இப்போது அதிகமுள்ளனர். நிறைய வீரர்கள் அனாயாச மட்டை சுழற்றலில் ஈடுபடுவதை இப்போது நீங்கள் நம் அணியில் பார்க்கிறீர்கள். இந்தத் தொடர் முழுதும் அடித்துப் பட்டையைக் கிளப்பும் ஆட்டத்தையே வெளிப்படுத்துவோம்,இந்த தொடரிலிருந்து இனி தூள்பறக்கும் ஆட்டம்தான்.

உலகக்கோப்பையைப் பொறுத்தவரை இங்கிலாந்து வெல்லவே அதிக வாய்ப்பு என்று கருதுகிறேன். அவர்கள் நம்பர் 1 டி20 அணி. அனைத்து அணிகளும் அவர்களைப் பற்றி அஞ்சியே ஆக வேண்டும். இவ்வாறு கூறினார் விராட் கோலி.

இங்கிலாந்து கேப்டன் மோர்கன் உலகக்கோப்பை வெற்றி வாய்ப்பு இந்தியாவுக்குத்தான் அதிகம் என்று கூற கோலியோ இங்கிலாந்துக்குத்தான் வாய்ப்பு என்று கூறுகிறார். இது பரஸ்பர அறிதலா இல்லை சொரிதலா என்பது தெரியவில்லை.

இன்று தொடங்கும் டி20 தொடர் முழுதும் அகமதாபாதில் தான் நடைபெறும், ஒருநாள் போட்டிகள் புனேயில் நடைபெறும்.i

இந்தியா உத்தேச அணி: ரோகித் சர்மா, ராகுல், விராட் கோலி, அய்யர், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல்/சுந்தர், ஷர்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார், சாஹல், நவ்தீப் சைனி

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே