அடுத்த 10 ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் மட்டுமே ஓடும் : ஹர்ஷ் வர்தன்

நாடு முழுவதும் அடுத்த 10 ஆண்டுக்குள் மின் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர் வளாகத்தில் புதுமை தொழில்நுட்ப மைய கட்டிடத்திற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் இந்தியா மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகிற்கும் பெரும் சவாலாக மாறியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

2030-க்குள் சர்வதேச அளவில் அறிவியல் வளர்ச்சியில் முதல் மூன்று நாடுகளில் இந்தியா இடம் பெற வேண்டும் எனவும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

இதேபோல் அடுத்த பத்தாண்டுகளில் நாடு முழுவதும் 100 சதவீதம் மின் வாகனங்களை மட்டுமே இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே