காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறாது – வானிலை மையம் தகவல்..!!

அந்தமானில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் உள்பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை 4 நாட்களுக்கு மழை தொடரும் என்றும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து, இன்று கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கையும், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கோவை, சேலம், தருமபுரி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய வானிலை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அந்தமானில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறுவதற்கான வாய்ப்பு இல்லை. மேலும், தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி வட தமிழகத்தை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே