#DelhiRains : டெல்லியில் சுரங்கப்பாதையில் தண்ணீரில் மூழ்கிய ஒருவரின் உடல் கண்டெடுப்பு

பலத்த மழையின் பின்னர், நாட்டின் தலைநகரான டெல்லியில் (Delhi) மிக மோசமான நிலை அடைந்துள்ளது, அனைத்து இடங்களிலும் தண்ணீர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

டெல்லியின் மிண்டோ ரயில்வே பாலத்தின் கீழ் ஒரு சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இது ஒரு டெம்போவின் ஓட்டுநர் என்று கூறப்படுகிறது. தற்போது போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

புது டெல்லி யார்டில் பணிபுரியும் டிராக்மேன் ராம்னிவாஸ் மீனா உடலை நீரிலிருந்து அகற்றினார். அவர் பாதையில் பணிபுரியும் போது, அவரது உடலைப் பார்த்ததாக ராம்னிவாஸ் கூறினார்.

பின்னர் அவர் தண்ணீரில் இறங்கி உடலை அகற்றினார். நீரில் மூழ்கியிருந்த பஸ்ஸின் முன்னால் இருந்த தண்ணீரில் அந்த உடல் மிதந்து கொண்டிருந்தது.

மிண்டோ ரயில்வே பாலத்தின் கீழ் சேமித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

போலீசார் சம்பவ இடத்திலேயே உள்ளனர். மேலும் நீரில் வேற எந்த நபரும் சிக்கவில்லை என்பதையும் தெரியவந்துள்ளது.

டெல்லியில் (Delhi) காலை மழைக்குப் பிறகு, கென்னாட் பிளேஸ் பகுதியில் ஒரு பஸ் தண்ணீரில் மூழ்கியது. மிண்டோ சாலை பாலத்தின் அடியில் உள்ள நீர் வெள்ளத்தில் மூழ்கி ஒரு DTC பஸ் அந்த நீரில் மூழ்கியது.

கடந்த பல நாட்களாக, டெல்லி மக்கள் வெப்பம் மற்றும் ஈரப்பதத்துடன் போராடி வந்தனர், ஜூலை 25 முதல் டெல்லியில் (Delhi) பருவமழை பெய்தது.

ஆனால் இதுவரை டெல்லியில் நல்ல மழை இல்லை. 19 ஆம் தேதி முதல் டெல்லியில் (Delhi) பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும் அடுத்த 2 நாட்களில் இதே போன்ற மழை கூடுதலாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே