டெல்லியில் சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்துவதற்கு கண்டதும் சுட உத்தரவுப் பிறக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஷாகீன் பாக் போராட்டத்தைத் தொடர்ந்து, ஜாஃபராபாத், மாஜ்பூர் ஆகிய இடங்களில் போராட்டம் நடைபெற்று வந்தது.

போராட்டத்தின் போது, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரானவர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

நேற்று இரவில் டெல்லியின் பல பகுதிகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டெல்லி வந்திருந்த நிலையிலும் பல்வேறு பகுதிகளிலும் கலவரம் நீடித்தது.

இந்தநிலையில், வடகிழக்கு டெல்லியில் ஒரு மாத காலத்துக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று துணை முதல்வர் மணிஷ் சிஸ்சோடியா அறிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த வன்முறை சம்பவத்தின் காரணமாக இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 150 பேர் காயமடைந்துள்ளனர்.

அதில் சுமார் 40% பேர் துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், கலவரத்தைக் கட்டுப்படுத்த டெல்லி காவல்துறை சிறப்பு ஆணையராக ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், வன்முறையாளர்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே