அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகோய்க்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் தன்னை நேரில் சந்தித்த அனைவரும் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் தருண் கோகோய் அறிவுறுத்தியுள்ளார்.
“நேற்று எனக்கு செய்யப்பட்ட கரோனா பரிசோதனையில், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்” என்று தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, அவரது மனைவி டோல்லி கோகோய்க்கு கரோனா தொற்று ஏற்படவில்லை.
தருண் கோகோய் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதாக கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.
அசாம் மாநிலத்தில் கரோனா உறுதி செய்யப்படும் 13வது எம்எல்ஏவாக தருண் கோகோய் உள்ளார்.