நேரில் ஆஜராவதில் இருந்து, ரஜினிக்கு விலக்கு அளிக்க முடியாது : விசாரணை ஆணையம் திட்டவட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.   

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. 

அதன்படி இதுவரை 446 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். இந்த நிலையில் 5 நாட்கள் நடைபெறும் 19வது கட்ட விசாரணையில் நடிகர் ரஜினிகாந்த் உட்பட 20 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி இன்று நடிகர் ரஜினிகாந்த் ஆஜராக வேண்டும் என்று விசாரணை ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில் அவரது தரப்பில் வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜரானார்.

அப்போது நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு,
ரஜினி தயாராக உள்ளார் என்று வழக்கறிஞர் இளம்பாரதி தெரிவித்தார். 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி விசாரணை ஆணையத்தில் நேரில்தான் ஆஜராக வேண்டும் என்றும்; அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் விசாரணை ஆணைய வழக்கறிஞர் வடிவேல் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே