டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் பதவிக்காலம் வரும் 22ம் தேதி முடிகிறது.

இதையடுத்து, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக 70 இடங்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்கிறது.

மாலை 6 மணிக்கு முன்பாக வந்து வரிசையில் காத்திருப்போருக்கு 6 மணிக்குப் பிறகும் வாக்களிக்க அனுமதியளிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு பணியில் டெல்லி போலீசார், துணை ராணுவப் படையினர் என 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

672 வேட்பாளர்களில் போட்டியிடும் இத்தேர்தலில், ஒரு கோடியே 47 லட்சம் வாக்காளர்கள் இன்று தங்கள் வாக்குகளை பதிவுசெய்ய உள்ளனர்.

இதற்காக 13 ஆயிரத்து 750 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களையும் பாஜக மூன்று இடங்களையும் வென்றன.

இன்றைய தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால நியு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.

110 வயதான மிக மூத்த வாக்காளர் காளிதாரா மண்டல் என்பவர் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் வாக்களிக்க உள்ளார்.

இத்தேர்தலில் மொத்தம் 132 வாக்காளர்கள் நூறு வயதை தாண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே