கிரீம்கள் மூலம் தோலை வெள்ளையாக்குவதாக விளம்பரம் செய்தால் 5 ஆண்டு சிறை, 50 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வருகிறது.

மருந்துகள் மற்றும் மாய நிவாரணங்கள் தொடர்பாக, ஆட்சேபணைக்குரிய விளம்பரங்களை தடை செய்யும் சட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.

இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவர, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

78 வகையான நோய்கள், குறைபாடுகளை சரிசெய்வதாகக் கூறி மருந்துகள், மாய நிவாரணங்கள் மற்றும் தயாரிப்புகளை விளம்பரம் செய்வது இந்த சட்டம் தடை செய்கிறது.

இந்த தடைப் பட்டியலில் தோலை வெள்ளையாக்குவது, பாலுறவு திறனை அதிகரிப்பது, திக்குவாய் மற்றும் பெண்களுக்கு மலட்டுத்தன்மையை குணப்படுத்துவது, முடியை பழுப்புநிறமாக மாற்றுவது தொடர்பான விளம்பரங்களும் சேர்க்கப்படுகின்றன.

மேலும் இத்தகைய விளம்பரங்களை செய்தால் 5 ஆண்டுகள் வரை சிறை மற்றும் 50 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே