தைப்பூச திருவிழா : திருச்செந்தூர் கோயிலுக்கு அலகு குத்தி, பாத யாத்திரையாக வந்துள்ள பக்தர்கள்

தைப்பூச திருவிழாவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு அலகு குத்தி, பாத யாத்திரையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தார்கள்.

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு தைப்பூச விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து முருக பக்தர்கள் பாதயாத்திரையாக வந்துள்ளனர்.

தைப்பூச திருவிழா இன்று  நடைபெறும் நிலையில் பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து பாத யாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர்.

தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் தரப்பில் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலை குமாரசுவாமி கோவிலில் தைபூசத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.

தைப்பூசம் விழாவின் 9ம் நாள் விழாவை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகர் உற்சவரை வைத்து, தேரோட்டம் நடத்தப்பட்டது.

விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே