தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது என  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிய ஆண்டில் புதுவையில் வேலைவாய்ப்புகள், தரமான மருத்துவம், சிறந்த கல்வி, அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், அரசுக்கான வருவாயை பெருக்குதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார். 

பின்னர் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் குறித்து நெல்லை கண்ணன் பேசியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த நாராயணசாமி, கொள்கை ரீதியாக விமர்சனம் செய்யலாம்; ஆனால் தனிப்பட்ட முறையில் ஒருவரை விமர்சனம் செய்வது நாகரீகமற்றது என்றார்.

மேலும் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே