சிறப்பு ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு செய்யும் இணையதளமான ஐஆர்சிடிசி இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் முன்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மே 12 ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதால் அதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ரயில்களுக்கான முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளத்தில் மட்டுமே நடைபெறும் ரயில்வே கவுண்டர்களில் கிடையாது என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விளக்கமளித்துள்ள ஐஆர்சிடிசி, சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்ய நிறைய பேர் முயன்று வருவதால் ஐ.ஆர்.சி.டி.சி இணையதள சர்வர் முடங்கியுள்ளது.
இதனையடுத்து இன்று மாலை 6 மணி அளவில் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் எனவும் சிரமத்திற்கு வருந்துவதாகவும் ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.