சென்னைக்கு ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம் – முதல்வர்

சென்னைக்கு மே 31ம் தேதி வரை ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம் என்று பிரதமர் மோடி உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் விமான சேவைகளையும் மே 31ம் தேதி வரை தொடங்கக் கூடாது என வலியுறுத்தி உள்ளார்.

பிரதமர் உடனான காணொலி உரையாடல் குறித்து முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் , தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு வெகுவாக குறைந்து 0.67 % தான் உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27 % பேர் குணமடைந்துள்ளனர்.

வரும் 31 ம் தேதி வரை விமான சேவைகளை தொடங்க வேண்டாம்.

சென்னை – டெல்லி இடையே ரயில் சேவையை தொடங்க வேண்டாம்.

குடும்ப அட்டை தாரர்களுக்கு இலவச உணவு பொருள் வழங்க , கூடுதல் தானியம் வழங்க வேண்டும்.

நெல் கொள்முதலுக்காக மானியத் தொகை ரூ.1,321 கோடியை முன் கூட்டியே விடுவிக்க வேண்டும்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே