பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு அபராதம் விதித்த டெல்லி உயர்நீதிமன்றம்..!!

5ஜி அலைக்கற்றையை இந்தியாவில் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகை ஜூஹி சாவ்லா.

4ஜி அலைக்கற்றையைவிட 5ஜி அலைக்கற்றையின் கதிர்வீச்சு 100 மடங்கு அதிகம், அதனால் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள். எனவே அதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொலைபேசி டவர்கள் காரணமாக சிட்டுக்குருவி இனம் அழிந்து போனதாக ஒரு குற்றச்சாட்டு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை ஜூகி சாவ்லா தாக்கல் செய்த மனு, நீதிபதி ஜேஆர் மிதா முன்பு விசாரணைக்கு வந்தது. அதில், இந்த வழக்கானது விளம்பரத்துக்காக தொடரப்பட்டது என நீதிபதி கூறினார்.

இந்த வழக்கை தள்ளுபடிசெய்த டெல்லி உயர்நீதிமன்றம் நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே