தீபா, தீபக் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்..! – சென்னை உயர்நீதிமன்றம்

ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகளாக ஜெ.தீபா மற்றும் தீபக் ஆகியோரை அறிவித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க உரிய நிர்வாகி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக் ஆகியோர் எதிர் தரப்பினராகச் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணைகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து முடிந்த நிலையில், அண்மையில் தீபா மற்றும் தீபக்கை இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் தீர்ப்பில் திருத்தம் செய்துள்ள நீதிமன்றம் ஜெ.தீபா மற்றும் தீபக் ஆகியோரை ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகளாக அறிவித்துத் தீர்ப்பளித்துள்ளது. 

இதற்கிடையே வேதா நிலையத்திற்கு ஜெ.தீபா செல்ல முயற்சிப்பதாகவும், அவ்வாறு அவர் செல்ல முயற்சித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைக்குறிப்பிட்ட நீதிமன்றம், நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை வேதா இல்லத்தில் நடைபெறுவதால் அங்கே சென்றால் பிரச்சனை வரும் எனத் தீபா தரப்புக்கு அறிவுரை வழங்கினர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே