மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது.

இன்று மாலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே பகுதியில் நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இது இன்று மாலை வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நகரக் கூடும்.

இது மேலும் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியதாக மாறி மெதுவாக நாளை மாலை மேற்கு தென்மேற்காக நகர்ந்து கேரள பகுதியை அடையக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், மன்னார் வளைகுடா அருகே நிலை கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் பகுதியிலேயே காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து நிலைகொள்ளும் என்றும்; 18 மணி நேரத்திற்குப் பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே