அண்ணா பல்கலைக்கழகம் துணை வேந்தர் சூரப்பாவிற்கு கமல்ஹாசன் ஆதரவு..!! (VIDEO)

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், நேர்மையாளராக இருப்பதற்காக சுரப்பா வேட்டையாடப்பட்டால், தாமும் தமது கட்சியும் சும்மா இருக்க மாட்டோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டுவிட்டர் பக்கத்தில் சுரப்பா இன்னொரு நம்பி நாராயணனா? என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், இது கல்வியாளருக்கும், அரசியல்வாதிகள் இடையேயான பிரச்னை அல்ல எனவும்; நேர்மையாக வாழ நினைப்பவருக்கும், ஊழல் பேர்வழிகளுக்கும் இடையேயான போர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே