சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று தொடக்கம்…!

தமிழக சட்டப் பேரவையில் இன்று வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகிறது.

பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் நடைபெறுகிறது.

அதன்பின் நேரமில்லாத நேரத்தில் பல முக்கியப் பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளின் மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

இதன் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதங்கள் நடத்திய பின்னர் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.சி.கருப்பணன் ஆகியோர் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே