நாகையில் தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்தி மீன்பிடித்த மீனவர்களுக்கும், அதனை தடுத்த மற்றொரு கிராம மீனவர்களுக்கும் நடுக்கடலில் பயங்கர மோதல் ஏற்பட்டது.

நாகை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலை மற்றும் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இதனிடையே நாகை -வேதாரண்யம் அருகே கடலில் கீச்சாங்குப்பம் மீனவர்கள் 120 பேர் இரண்டு விசைப்படகில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது பைபர் படகில் சென்ற வெள்ளப்பள்ளம் மீனவர்கள் அந்த படகை வழிமறித்து தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக்கூடாது என்று கூறியுள்ளனர்.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் இரு கிராம மீனவர்களும் நடுக்கடலில் கற்கள், பாட்டில் மற்றும் படகுகளால் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர்.

இந்த மோதல் சம்பவத்தால் கீச்சாங்குப்பம் வெள்ளப்பள்ளம் இரு கிராமங்களைச் சேர்ந்த 17 மீனவர்கள் காயமடைந்தனர்.

காயம் அடைந்த மீனவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே