கொரோனா பாதிப்பு : தன்னார்வலர்கள் தனியாக நிவாரணப்பொருட்கள் வழங்க தடை

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நர் அதிகரித்து வரும் நிலையில், பதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

மேலும் இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் நேரடியாக நிவாரண பொருட்கள் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிவாரண நிதியாக இருந்தால் முதல்வர் நிவாரண நிதிக்கும், பொருளாக இருந்தால் சென்னை மாநகராட்சி ஆணையரிடமும் கொடுக்கலாம்.

அரசின் அறிவுரைகளை மீறி யாரேனும் செயல்பட்டால் ஊரடங்கை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மற்ற மாவட்டங்களில் ஆட்சியர்களிடம் நிவாரண பொருட்களை வழங்கலாம்.

சில நபர்கள், கட்சி, கட்சியினர்கள் நேரடியாக நிவாரண பொருட்களை வழங்குவது தடை உத்தரவை மீறும் செயல்.

சமைத்த உணவுகள், நிவாரணப்பொருட்களை வழங்குவதால் தனிநபர் இடைவெளி பாதிக்கிறது” என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே