மதுரை ஆவினிலிருந்து விற்பனை செய்யப்பட்ட பாலில் இறந்த நிலையில் ஈ இருந்ததால் நுகர்வோர் அதிர்ச்சி அடைந்தனர்.
மதுரை ஆவினிலிருந்து நாள் ஒன்றுக்கு 5 இலட்சம் பால் பாக்கெட் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 40 வழித்தடங்களில் பால் பாக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது, நாகமலை பல்கலை அருகே ஆவின் டெப்போவில் விற்பனை செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டை வாங்கிய நுகர்வோர் ஒருவர் இறந்த நிலையில் ஈ இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அந்த பாலை டெப்போவில் அந்த வாடிக்கையாளர் திருப்பி ஒப்பைடத்தார். இந்த தகவல் அறிந்து ஆவின் நிறுவன அதிகாரிகள் சம்பந்தபட்ட பால் டெப்போவிற்கு சென்று பால் பாக்கெட்டை திரும்ப பெற்று சென்றனர். மேலும் பால் பாக்கெட்டில் ஈ வந்தது எப்படி என விசாரணை நடத்தி வருகிறார்கள். பாலினை பேக்கிங் செய்யும் போது தவறு நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.