வங்கி இணைப்பு நடவடிக்கையை கண்டித்து தர்ணா போராட்டம்

வங்கி இணைப்பு என்ற பெயரில் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை மத்திய அரசு தடுத்து நிறுத்துவதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வங்கிகள் இணைக்கப்படுவதை கண்டித்து வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

வங்கிகள் இணைப்பு என்ற பெயரில் வங்கி கிளைகளை குறைப்பதன் மூலம் ஆண்டுக்கு 80 ஆயிரம் இளைஞர்களின் வேலைவாய்ப்பு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

மத்திய அரசின் வங்கி இணைப்பை கண்டித்து வரும் 22-ஆம் தேதி நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தங்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் எச்சரித்தனர்.

இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே