தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை ‘ஆம்பன்’ புயல் உருவாகிறது- சென்னை வானிலை

தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை(மே 16) ‘ஆம்பன்’ புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

வங்கக் கடலில் நாளை (சனிக்கிழமை) ஆம்பன் புயல் உருவாக வாய்ப்புள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

தொடர்ந்து, நாளாய் மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாற வாய்ப்புள்ளது.

இது மே 17 ஆம் தேதி வரை வடமேற்கு திசையிலும், 18 ஆம் தேதி வடகிழக்கு திசையை நோக்கி நகர்வதால் 18, 19 ஆகிய தேதிகளில் மணிக்கு 75 -85 கிமீ வேகத்தில் காற்று வீசும். 

சில நேரங்களில் 95 கிமீ வேகம் வரை காற்று வீசும்.

எனவே, அந்த சமயங்களில் தெற்கு வங்கக்கடல், மத்திய வங்கக் கடல், அரபிக்கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே