கொரோனா நோய்தொற்று பாதிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக ரூ. 2 கோடி நிதியுதவி செய்துள்ளார் ஜனசேனா கட்சியின் தலைவரும், தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண்.
கொரோனா வைரஸால் உலகம் முழுக்க 21,000 மக்கள் இறந்துள்ளார்கள்.
கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். க
கொரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா்.
கொரோனா நோய்தொற்று பாதிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக ஜனசேனா கட்சியின் தலைவரும், தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களின் முதல்வர் நிவாரண நிதிக்குத் தலா ரூ. 50 லட்சம் அளிப்பதாகக் கூறியுள்ளார். மேலும் ரூ. 1 கோடியைப் பிரதமரின் நிவாரண நிதிக்கு அளிப்பதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.