சட்டவிரோத நிதி தொடர்பான வழக்கில் ஹபீஸ் சயீதுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஹபீஸ் சயீது பயங்கரவாதத்துக்கு ஆதரவாக நிதி திரட்டி வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கு பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

இதையடுத்து வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், லஷ்கா்-ஏ-தொய்பா ஆதரவாளர் ஹபீஸ் சயீது, பேராசிரியர் ஜாபர் இக்பால் மற்றும் யஹ்யா முஹாஜித் ஆகியோருக்கு லாகூர் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் தலா 10.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளது.

ஹபீஸ் அப்துல் ரஹ்மானுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

மேலும், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக ஜமாத்-உத்-தாவா அமைப்பினர் மீது இதுவரை 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாதி ஹபீஸ் சயீத் தேடப்பட்டு வந்த நிலையில், கடந்த 2019 ஜூலை 17 ஆம் தேதி லாகூரில் இருந்து குஜ்ரன்வாலா நகருக்கு சென்று கொண்டிருந்த போது பயங்கரவாத தடுப்புப் படையினர் அவரை கைது செய்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே