சேலத்தில் இன்று முதல் 2 நாள்களுக்கு ஊரடங்கு…

சேலத்தில் இன்று பிற்பகல் 1 மணி முதல் 2 நாள்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

தமிழக அரசு சார்பிலும், அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பிலும் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் தற்போது கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,683ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சேலத்தில் நேற்று புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29-ஆக உள்ளது.

இதையடுத்து கரோனா தடுப்பு நடவடிக்கையாக, சேலத்தில் இன்று பிற்பகல் 1 மணி முதல் 2 நாள்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் ராமன் தகவல் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை, மருந்தகங்கள் போன்றவை மட்டுமே 2 நாள்களுக்கு இயங்கும் என்றும்; நடமாடும் வாகனங்கள் மூலமாக காய்கறிகள் விற்கப்படும் என்றும், ஊரடங்கை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே