மேற்கு வங்கத்தில் மே இறுதிவரை ஊரடங்கு நீட்டிப்பு…!!

கொரோனா பாதிப்பின் காரணமாக மே மாத இறுதிவரை ஊரடங்கை நீட்டிக்கவுள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மே-3ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரவுள்ளநிலையில், ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்துவருகின்றன.

இதுதொடர்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியிருந்தார்.

இந்தநிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘மே மாத இறுதி வரை மேற்குவங்க அரசு ஊரடங்கு உத்தரவை தொடரவுள்ளது. ஆனால், பச்சை நிற பகுதிகளிலுள்ள சிறிய கடைகளுக்கும் சில தொழில்துறைகளுக்கும் தளர்வு அளிக்கப்படும்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,397 பேருக்கு கொரோனா சோதனை செய்தநிலையிலும், 33 பேருக்குதான் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய மற்றும் அத்தியவசியமற்ற சிறிய கடைகள், சிறிய அளவிலான எலக்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், புத்தகக் கடைகள், பெயின்ட் கடைகள், மொபைல் கடைகள், டீக்கடைகள், துணி துவைக்கும் கடைகள் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

ஆனால், டீக்கடைகளில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி கிடையாது.

கொரோனா பாதிப்பு குறைவாக பச்சை நிற மண்டலங்களில் கட்டுமான துறைகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.

இந்த இக்கட்டான நேரத்திலும் பா.ஜ.கவினர் போலிச் செய்திகளைப் பரப்பிவருகின்றனர்’ என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே